மெட்ரோ ரெயிலில் முடியை பிடித்து சண்டை போடும் பெண் பயணிகள் - காரணம் என்ன?
women pessangers fight in delhi metro train
தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரெயிலில் 2 பெண்கள் குடுமிப்பிடி சண்டை போடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவி வருகிறது. அந்த வீடியோவில், நவநாகரிக உடையான பேண்ட் சட்டை அணிந்த 2 பெண்கள், ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்தபடி சண்டையிடுகிறார்கள்.

ஒருவர் மற்றவரை மெட்ரோ ரெயில் இருக்கையில் தள்ளிவிட்டு அவரை எழவிடாமல் இறுக்கிப்பிடித்துக் கொண்டே வாக்குவாதம் செய்கிறார். கீழே இருக்கும் பெண்மணியும் பதிலுக்கு அந்தப் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்தபடி மோதிக் கொள்கிறார். இன்னொரு பெண் வந்து சண்டையை விலக்கிவிட முயற்சிப்பது போன்று உள்ளது.
அந்தப் பெண்கள் எதற்காக சண்டையிட்டுக் கொண்டார்கள் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவம் சக பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women pessangers fight in delhi metro train