இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண்.! லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் மாரல் கிராமத்தை சேர்ந்தவர் கவிதா மாத்ரே. இவர் கல்யாண் கிழக்கு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது சாகத் மேம்பாலம் அருகே வந்தபோது, கவிதா மாத்ரே எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த டேங்கர் லாரியின் சக்கரம் மீது ஏறி இறங்கியதில் கவிதா மாத்ரே நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த கவிதா மாத்ரேயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman killed in lorry falling off wheel


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->