மே.வங்கம்: வன்கொடுமைக்கு ஆளான எங்கள் மகள் உயிருக்கு ஆபத்து... கதறும் பெற்றோர்!
WB Medical college student assault case
மேற்கு வங்கத்தின் துர்காபூரில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 23 வயது மருத்துவ மாணவி உயிர் பிரச்சனையில் இருப்பதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த அந்த மாணவி, துர்காபூர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், தனது ஆண் நண்பருடன் மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே சென்றபோது, மூவர் குழுவால் அவள் மீது கொடூர வன்கொடுமை நடந்து உள்ளது. சம்பவத்துக்குப் பிறகு அவர் துர்காபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது பெற்றோர், தங்கள் மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரத்திற்கு மாற்றி சிகிச்சை அளிக்க ஒடிசா முதல்வர் மோகன் சரன் மாஜியை நாடியுள்ளனர். மேலும், மேற்கு வங்கத்தில் இருந்தால் மகளை உயிருடன் விடமாட்டார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், ஒடிசா அரசு அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று மாணவியை சந்தித்தனர். பெற்றோருடன் தொலைபேசியில் பேசிய ஒடிசா முதல்வரிடம், அவர்கள் மகளின் பாதுகாப்பை உறுதி செய்து, உடனடி சிகிச்சை மாற்றத்தை கோரியுள்ளனர்.
இதற்கிடையில், “பெண்கள் இரவில் வெளியே செல்ல வேண்டாம்” என்று கூறிய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதற்கு பதிலாக மாணவியின் தந்தை, “என் மகள் நள்ளிரவில் அல்ல, இரவு 8 மணிக்கே வெளியே சென்றார்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை நடத்தியபோது, அவளுடன் இருந்த ஆண் நண்பர் தப்பியோடியதாகவும், உதவி கோர யாரையும் அணுகவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
WB Medical college student assault case