டீசல் காரை பேட்டரி கார்களாக மாற்றும் விழுப்புரம் மெக்கானிக்.!
vilupuram mechanic change diesel car to battery car
டீசல் காரை பேட்டரி கார்களாக மாற்றும் விழுப்புரம் மெக்கானிக்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே பெரியபாபு சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். மெக்கானிக் ஆன இவர் சமீப ஆண்டுகளாக பேட்டரிகள் மூலம் கார்களை இயங்கச் செய்வது குறித்த ஆய்வுகளை செய்து வந்தார்.
அவற்றின் வெற்றியாக ஏற்கெனவே உள்ள பெட்ரோல், டீசல் இன்ஜின் கார்களை வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் பேட்டரி கார்களாக மாற்றித் தந்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக பழைய கார்களில் உள்ள இன்ஜின்களை அகற்றிவிட்டு, அவற்றில் பேட்டரிகளை மட்டும் பொருத்தி பேட்டரி கார்களாக வடிவமைத்து வருகிறார். இது தொடர்பாக தற்போதைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் இந்த பேட்டரி கார்கள் உருவாக்கப்படுகிறது.
தனக்கு தேவையான பொருளாதார உதவிகள் கிடைத்தால் இதை விடவும் குறைந்த விலையில் பேட்டரி கார்களாக மாற்றம் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மணிகண்டனின் இந்த முயற்சிக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
vilupuram mechanic change diesel car to battery car