விஜய் மல்லையா, நீரவ் மோடியிடம் இருந்து 18,000 கோடி மோசடி பணம் மீட்பு- மத்திய அரசு தகவல்.! - Seithipunal
Seithipunal


பண மோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை இயக்குனரகத்திற்கு பரந்த அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் அரசுக்கு எதிராக கபில் சிபல், அசோக் மனு சிங்கவி மற்றும் முகுல் ரோத்கி உள்ளிட்ட பல மூத்த வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர். பண மோசடி தடுப்பு சட்டத்தில் கொண்டு வந்துள்ள சமீபத்திய சட்ட திருத்தங்கள் தவறாக பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.

அப்போது அவர் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் தொடர்புடைய வங்கி கடன் மோசடி தொடர்பான வழக்குகளில் இதுவரை அவர்களிடமிருந்து 18,000 கோடி ரூபாய் மீட்கப்பட்டு வங்கிகளில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வெளி நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Mallya, Neerav Modi recover Rs 18,000 crore fraud Central Government


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->