மீண்டும்..மீண்டுமா! மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சட்டினியில் எலி நீச்சலடித்த வீடியோ! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி நீச்சல் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் சுல்தான்பூரில் உள்ள ஜேஎன்டியூஎச் பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள்  விடுதியில் உள்ள கேண்டினில் சட்னி நிறைந்த பெரிய பாத்திரத்தில் எலி ஒன்று நீந்தியதைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக பழைய மாணவர் கூறுகையில், பொறியியல் கல்லூரியில் சுல்தான் போரில் இந்த நிலை புதிதல்ல, 2016 முதல் 2020 வரையில் தரமான உணவை எங்களுக்கு வழங்குவதற்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கேண்டின் நிறுவனத்திடம் வாதிடவேண்டி இருந்தது. இன்று இதே தொடர்வதை பார்க்க வருத்தமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் தாமோதர் ராஜா நரசிம்ஹா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநில பொறியியல் கல்லூரி விடுதி கேண்டினில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சட்டினியில் எலி ஊர்ந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

video of a rat swimming in a chutney given to students


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->