விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு...! வீட்டின் அருகே விளையாடிய 7 வயது சிறுமியை வாயைப் பொத்திக் கடத்த முயன்ற வடமாநில இளைஞர் கைது...! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் அய்யூர் அகரம் பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை வாயைப் பொத்திக் கடத்த முயன்ற வடமாநில இளைஞரை, சிறுமியின் தாயார் கூச்சலிட்டு விரட்டியதுடன், அப்பகுதி மக்களின் உதவியுடன் பிடித்தார். இதைத்தொடர்ந்து, அங்கு விரைந்த காவலர்கள் அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அய்யூர் அகரம் பகுதியைச் சேர்ந்த ரூபேஷ்–கவிதா தம்பதியின் மகள் ஸ்ரீ தர்சினி (7). நேற்று சிறுமி தனது வீட்டின் அருகே மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திடீரென சிறுமியின் வாயைப் பொத்தி அவரைக் கடத்திச் செல்ல முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், உடனடியாகத் தடியை எடுத்துக்கொண்டு கூச்சலிட்டபடி அந்த இளைஞரை விரட்டிச் சென்றார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினரும் பொதுமக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.பொதுமக்கள் திரண்டு வருவதைக் கண்ட அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

இருப்பினும், அவரைச் சுற்றிவளைத்துப் பிடித்த பொதுமக்கள், ஆத்திரத்தில் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், அந்த இளைஞரைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.கைது செய்யப்பட்ட இளைஞரிடம் காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், சிறுமியைக் கடத்த முயன்றதன் பின்னணி குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைக் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Huge stir Villupuram youth from Northern State arrested trying kidnap 7 year old girl who playing near her house by gagged


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->