தவறான உறவுக்கு அழைத்த விடுதி வார்டன்... ஆத்திரத்தில் பெற்ற தாயே கன்னத்தில் அறைந்த பரபரப்பு சம்பவம்...! - Seithipunal
Seithipunal


சென்னையில், மாணவனைத் தவறான உறவுக்கு அழைத்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான விடுதி வார்டனை, மாணவனின் தாயார் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வார்டனை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வார்டனாகப் பணியாற்றி வரும் ஒருவர், அருகிலுள்ள அரசினர் மாணவர் விடுதிக்குச் சென்று அங்குள்ள மாணவர் ஒருவரைத் தவறான உறவுக்கு அழைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், விடுமுறை நாளில் தனது மகனைப் பார்ப்பதற்காக மாணவரின் தாயார் விடுதிக்கு வந்துள்ளார்.

அப்போது, தன்னிடம் நடந்த சம்பவம் குறித்து அந்த மாணவர் தாயிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், சம்பந்தப்பட்ட வார்டனை நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளார்.அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், மாணவனின் தாயார் வார்டனைக் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட காவலர்கள், வார்டனைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hostel warden who called him out abusive relationship sensational incident where mother slapped him anger


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->