'வெற்றித் தமிழகத்தை உருவாக்குவோம்'...! - ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து...!
Let create successful Tamil Nadu Greetings from Chief Minister Vijay occasion Ayudha Puja and Vijayadashami
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு முதல்வர் விஜய் தனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உழைப்பின் பெருமையையும், புதிய முயற்சிகளின் வெற்றியையும் போற்றும் இத்திருநாட்கள் அனைவரது வாழ்விலும் நம்பிக்கையையும் நல்வளத்தையும் பெருக்கட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"நமது வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் துணைநிற்கும் கருவிகள், வாகனங்கள், தொழிலுக்குப் பயன்படும் பொருட்கள் என அனைத்தையும் இறைவனாகக் கருதி வழிபட்டு, உழைப்பின் சிறப்பையும் தொழிலின் மேன்மையையும் போற்றும் இனிய நாளாக ஆயுத பூஜை திகழ்கிறது.
அதேபோல், கல்வி, கலை, தொழில் உள்ளிட்ட துறைகளில் புதிய முயற்சிகளைத் தொடங்கி, அவற்றில் வெற்றிகளைப் பெறுவதற்கான நன்னாளாக விஜயதசமி விளங்குகிறது.
இவ்விரு திருநாட்களையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பண்டிகைகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் புதுநம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் செல்வச் செழிப்பையும் கொண்டுவரட்டும்.
நன்மை பயக்கும் புதிய முயற்சிகளைத் துணிவுடன் முன்னெடுத்து, கல்வியிலும் தொழில் வளர்ச்சியிலும் சிறந்து விளங்கி, வெற்றித் தமிழகத்தை உருவாக்குவோம்.
அனைவரின் முயற்சிகளும் வெற்றியடையட்டும்! ஒவ்வொரு குடும்பத்திலும் நலமும் வளமும் பெருகட்டும்!.இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
English Summary
Let create successful Tamil Nadu Greetings from Chief Minister Vijay occasion Ayudha Puja and Vijayadashami