பள்ளிகளில் மாணவர்களின் வழிபாட்டு உரிமை பறிப்பா...? - தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் மத அடையாளங்கள் தொடர்பான சர்ச்சைகளும், மாணவர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரான செயல்களும் அதிகரித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களிடம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தசரா விரதம் மேற்கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மாலைகளைக் கழற்றச் சொல்லி, அவர்களைத் தாக்கியதாகத் தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பத்தாம் வகுப்பு மாணவி அணிந்திருந்த கைக் காப்பை மறைக்கச் சொல்லி தலைமை ஆசிரியை வலியுறுத்தியதாக மற்றொரு புகார் எழுந்துள்ளது.

அடுத்தடுத்து வெளிவரும் இத்தகைய சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மாணவர்களின் இளம் மனங்களில் வெறுப்புணர்வை விதைத்து, அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் வழிபாட்டு உரிமைகளையும் பறிக்கும் செயல்கள் கல்வி நிலையங்களில் அரங்கேறுவது கடும் கண்டனத்திற்குரியது. இத்தகைய மனித உரிமை மீறல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், மத அடக்குமுறை தொடர்பான சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

அரசின் அமைச்சர்களே நடுநிலையைக் கடைப்பிடிக்காமல், குறிப்பிட்ட மதத்தின் சார்பில் பாரபட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள நயினார் நாகேந்திரன், இதுபோன்ற அணுகுமுறைகளே பள்ளி நிர்வாகங்களின் அத்துமீறல்களுக்கும் வழிவகுப்பதாக விமர்சித்துள்ளார்.கல்வி நிலையங்கள் சமத்துவம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்க்கும் இடங்களாகத் திகழ வேண்டும்.

மாறாக, ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளங்களை ஒடுக்குவதற்கான தளங்களாக அவை மாறுவதை அரசு அனுமதிக்கக் கூடாது.எனவே, ஆத்தூர் மற்றும் தக்கலை பள்ளிகளில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தவெக அரசும் அதன் அமைச்சர்களும் மத விவகாரங்களில் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதைத் தவிர்த்து, அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் சமமாகப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Should students right worship be taken away schools Nayinar Nagendran demands action against head teachers


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->