இந்திய விமானங்களுக்கான வான்வழித் தடை மேலும் ஒரு மாத நீட்டிப்பு...! நவம்பர் 24 வரை பாகிஸ்தான் கெடுபிடி...! - Seithipunal
Seithipunal


இந்தியாவைச் சேர்ந்த சிவில் மற்றும் ராணுவ விமானங்கள் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, பாகிஸ்தான் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. இதன்படி, இந்திய விமானங்களுக்கான வான்வழித் தடை நவம்பர் 24-ந்தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, இரு நாடுகளும் அடுத்தடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி முதல் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்குப் பாகிஸ்தான் முதன்முறையாகத் தடை விதித்தது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, இந்தத் தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய விமானங்களுக்கான வான்வழித் தடையைப் பாகிஸ்தான் மீண்டும் நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம், இந்தக் கட்டுப்பாடு வருகிற நவம்பர் 24-ந்தேதி வரை தொடரும் எனத் தெரிவித்துள்ளது.

இதனால், இந்தியாவைச் சேர்ந்த சிவில் மற்றும் ராணுவ விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான உறவின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Airspace ban on Indian flights extended another month Pakistan tightens restrictions until November 24


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->