ஜனாதிபதியை அவமதித்தது பெண்மணி என்பதாலா? பழங்குடி என்பதாலா? - விசிக தலைவர் சாராமரிக் கேள்வி.! - Seithipunal
Seithipunal


டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் இந்திய குடிமக்ககளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வயது மூப்பு காரணமாக அத்வானியால் கலந்துகொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், ஜனாதிபதி முர்மு நேற்று அத்வானியின் வீட்டுக்கே சென்று விருதை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அத்வானியின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வயது மூப்பு காரணமாக இருக்கையில் அமர்ந்திருந்த அத்வானிக்கு ஜனாதிபதி முர்மு நின்று கொண்டு விருதை வழங்கினார். அப்போது, அருகில் இருந்த பிரதமர் மோடி இருக்கையில் அமர்ந்திருந்தார். இது தொடர்பான புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து, நாட்டின் ஜனாதிபதி நின்றபடி இருந்ததற்கு நாடும் கடும் கண்டனம் எழுந்தது. அந்த வகையில், தமிழகத்தின் விசிக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; "ஜனாதிபதியை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா? தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, ஜனாதிபதிதான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா?

இந்த அவமதிப்பு- இவர் பெண்மணி என்பதாலா? அல்லது இவர் பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா? குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு? பெரும் அதிர்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck leader thirumavalavan raise question president murmu standing photo issue


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->