15 வயது சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர காதலன்... நாடக காதலால் அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலியில் வசித்து வந்த 16 வயது சிறுமியை, அதே பகுதியை சார்ந்த வாலிபன் ஒருவன் காதலிப்பது போல நடித்துள்ளான். இவனது காதல் வலையில் விழுந்த சிறுமியும், கயவன் தன்னை உண்மையாக காதலிக்கிறான் என்று எண்ணியுள்ளார். 

இந்நிலையில், காதல் என்ற மாயவலையில் விழுந்த சிறுமியை காமுடன் கடந்த ஒரு வருடமாக சீரழித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அத்துமீறியுள்ளான். 

இதனையடுத்து சிறுமியை தனது நண்பர்களுக்கும் விருந்தளிக்க நினைத்த கொடூரன், சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தி கண்முன்னே சிறுமியை சீரழிக்க வைத்துள்ளான். இதனை விடியோவாகவும் பதிவு செய்துள்ளான். 

இந்த விடியோவை காமுகன் இணையத்தளத்தில் பரப்பவே, இந்த விஷயம் தற்போது சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய காமுகன் மற்றும் அவனது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh girl gang sexual abuse by Love boy and friends forced harassment


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal