லக்னோ விமான நிலையத்தின் வெளியே 12 அடி லட்சுமணன் சிலை - முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் ஜி20 மாநாடு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இந்த நிலையில், நேற்று மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கு, விமான நிலையத்தையும் பிரதான சாலையையும் இணைக்கும் மேம்பாலம், விமான நிலையத்தை சுற்றிலும் அழகுபடுத்தும் மேம்பாட்டு திட்டங்களை திறந்து வைத்தார்.

அதுமட்டுமல்லாமல், விமான நிலையத்தை சுற்றிலும் அழகுபடுத்தும் திட்டத்தில் விமான நிலையத்திற்கு வெளி பகுதியில் இந்து மத கடவுள் லட்சுமணனின் பன்னிரண்டு அடி உயர சிலை நிறுவப்பட்டிருந்தது.

அந்த சிலையையும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்துவைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் லக்னோ தொகுதி எம்.பி.யான மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தொண்டர்கள் பொதுமக்கள் என்று பலர் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttar pradesh cm yogi adityanath open 12 feet latchumanan statue in lukno airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->