சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதியை இடித்து அகற்றிய இஸ்லாமியர்கள்!
UP Illegal Masuthi islam
உத்தர பிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டம், அஸ்மோலி காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ரயா புஜுர்க் கிராமத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி, அதே கிராம முஸ்லிம் சமூக மக்களால் புல்டோஸர் உதவியுடன் இடிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம், அந்த மசூதி கட்டிடம் சட்டவிரோதமானது என்று அறிவித்து, சமீபத்தில் இடிக்க நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, மசூதி கமிட்டி தாமாகவே இடித்து அகற்றுவதாக ஒப்புக்கொண்டு, நான்கு நாள் கால அவகாசம் கேட்டது.
அந்த அவகாசம் வழங்கப்பட்ட பின், முதலில் சுத்தியல், கடப்பாறை கொண்டு இடிப்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால் வேலை தாமதமாகியதால், கால அவகாசத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று புல்டோஸர் கொண்டு கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடு உள்ளேயே இடிப்பு நிறைவுபெற வேண்டும் என்பதற்காக புல்டோஸர் பயன்படுத்தியதாக முஸ்லிம்கள் தெரிவித்தனர்.
இதற்கு முன், இதே பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட திருமண மண்டபம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி காவல் துறை முன்னிலையில் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.