நேபாள விமான விபத்து: இறந்தவர்களின் உடல்களை கொண்டுவர உ.பி முதலமைச்சர் அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


நேபாள விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மாநிலத்திற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் இந்த் விவாமன்ம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 68 பயணிகள் மற்றும் நான்கு விமான ஊழியர்கள் என 72 பேருடன் நேற்று காலை 10:33 மணிக்கு புறப்பட்ட விமானம் காஸ்கி மாவட்டத்தின் பொக்காராவில் தரையிறங்கும்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் உயிரிழந்த 5 இந்தியர்கள் உட்பட 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் ஐந்து இந்தியர்களில் நான்கு பேர் உத்தரப் பிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனு ஜெய்ஸ்வால், அனில் ராஜ்பர், அபிஷேக் குஷ்வாஹா மற்றும் விஷால் சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதியநாத், இறந்தவர்களின் உடல்களை மாநிலத்திற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்திவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நேபாளத்தில் நடந்த விமான விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் உயிரிழந்த இந்திய குடிமக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் சிரம் தாழ்ந்த அஞ்சலி. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

மேலும் இறந்தவர்களின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UP CM Yogi adityanath instructs to bring the bodies of those who died in the Nepal plane crash


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->