35 வயது பெண்ணை, மணந்த 75 வயது முதியவர் மறுநாளே உயிரிழந்த மர்மம் - போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் ஜான்பூர் மாவட்ட குச்முச் கிராமத்தில் 75 வயது முதியவர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்ருராம் என்ற அந்த முதியவர், ஒரு வருடத்திற்கு முன்பு தனது மனைவியை இழந்து தனியாக வாழ்ந்து வந்தார். குழந்தைகள் இல்லாத காரணத்தால் விவசாய வேலையிலேயே தன்னை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி ஜலால்பூரைச் சேர்ந்த 35 வயது பெண்ணை அவர் மணந்தார். திருமணம் சட்டப்படி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் சங்ருராமின் மறுமணம் குறித்து அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின் அடுத்த நாள் காலை அவர் திடீரென உயிரிழந்தார்.

இதனால் சந்தேகம் எழுந்துள்ளதால் உறவினர்கள் இறுதிச்சடங்குகளை நிறுத்தி, மரணத்திற்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திடீர் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UP 75 old man death marriage after day


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->