ஐக்கிய அரபு அமீரக லாட்டரி: உடுப்பி இளைஞருக்கு ரூ. 49 கோடி ஜாக்பாட்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம், கடப்பாடி மட்டு பகுதியைச் சேர்ந்த சாந்தனு ஷெட்டிகர் என்பவருக்கு அதிர்ஷ்ட தேவதை கண் திறந்துள்ளார். ஓமனில் பணிபுரிந்து வரும் இவர், ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) பிரபல லாட்டரி குலுக்கலில் சுமார் ரூ. 49 கோடி (20 மில்லியன் திராம்) பரிசுத் தொகையை வென்று அசத்தியுள்ளார்.

சாந்தனு இந்த லாட்டரி சீட்டை 500 திராம் (சுமார் ₹12,300) கொடுத்து வாங்கியுள்ளார்.

அதிர்ஷ்டம்: கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து லாட்டரி வாங்கி வந்த அவருக்கு, இந்த முறை எதிர்பாராத விதமாக ஜாக்பாட் அடித்துள்ளது. ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் இன்று கோடீஸ்வரராக மாறியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மகள் தந்த அதிர்ஷ்டம்:
சாந்தனுவுக்கு கடந்த மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. தன் மகளின் பிறப்பே தனக்கு இந்த மகா அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் கருதுகிறார். கடினமாக உழைக்கும் ஒரு சாமானிய இளைஞனின் வாழ்வில் இந்தத் தொகை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு இது போன்ற செய்திகள் அவ்வப்போது உற்சாகத்தை அளித்தாலும், சாந்தனுவின் இந்த வெற்றி அவரது குடும்பத்திற்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UAE Lottery Win Udupi Youth Becomes Crorepati


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->