"ஓம்" போட்ட துணிக்கு தீ வைத்த சிறுவன் - போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், 'ஜெய் ஸ்ரீ ராம்' மற்றும் 'ஓம் என்று அச்சிடப்பட்ட துணியை தீவைத்து எரித்து, அதனை மிதிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 

அந்த வீடியோவில், சிறுவன் ஒரு துணியை எரிப்பதும், அந்த செயலை மற்றொரு சிறுவன் பதிவு செய்வது போன்று உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து கோரவால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளளது. 

இது தொடர்பாக நடத்திய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 11 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் என்பதும், சோன்பத்ராவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் “ஜெய் ஸ்ரீராம்“ கோஷங்களை எழுப்பியதாகக் கூறி 11-ம் வகுப்பு மாணவர் ஆசிரியரால் தாக்கப்பட்டார். 

இதேபோல், மற்றொரு சம்பவத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில், வகுப்பறையின் கரும்பலகையில் “ஜெய் ஸ்ரீராம்“ என்று எழுதியதற்காக பத்தாம் வகுப்பு மாணவனை அடித்த அரசுப் பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two students fire to jai sri ram and om cloth in uttar pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->