பள்ளிக்குத் துப்பாக்கியுடன் வந்த மாணவர்கள் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டம் ரெஜிநகர் பகுதியில் "அந்துல்பேரியா" என்ற பெயரில் செயல்பட்டு வரும் பள்ளியில், 11-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் தங்களுடன் துப்பாக்கி ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதனை காட்டி சக மாணவர்களை மிரட்டியுள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் சம்பவம் குறித்து பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் வகுப்பறைக்குச் சென்று அவர்களிடம் இருந்து துப்பாக்கியை பறித்தனர்.

அந்தத் துப்பாக்கி ஒவ்வொரு முறையும் ஒரு குண்டு போட்டு சுட கூடிய நாட்டு துப்பாக்கி வகையை சேர்ந்தது என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அந்த இரு மாணவர்களில் ஒருவர் தன்னுடைய நெருங்கிய குடும்பத்தினரிடம் இருந்து அந்த துப்பாக்கியை வாங்கி வந்தது தெரிய வந்தது.

அதன் பின்னர் ஆசிரியர் ஒருவரிடம், சக மாணவர்கள் தெரிவித்ததாவது, சமீபத்தில் இருவரையும் கண்டித்து, சத்தம் போட்ட பள்ளி காவலாளியை சுடுவதற்காக துப்பாக்கியை கொண்டு வந்தோம் என்று அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து கூறி வந்ததாக தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மாணவர்களை விசாரணைக்காக தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர். மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளியின் தலைமையாசிரியர் ஜகாங்கிர் ஆலம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two students come to school with gun in west bengal


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->