திடீரென வீட்டிற்குள் புகுந்த கிளைடர் விமானம்.! விமானி உள்பட இருவர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் மாவட்டத்தில்  பர்வாடா விமான தளத்தில் இருந்து கிளைடர் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென இறங்கியதால் விமானம் குடியிருப்பு கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில், விமானி மற்றும் பயணி ஒருவர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற மீட்புப் படையினர் பலத்தக் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், "காயமடைந்த பயணி பாட்னாவைச் சேர்ந்தவர் என்றும், அவர் தன்பாத் மாவட்டத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவர் விமானத்தில் இருந்து நகரத்தை சுற்றிப் பார்ப்பதற்காக கிளைடர் சவாரி செய்துள்ளான். 

இந்த கிளைடர் விமான சேவை ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதில், விமானி மற்றும் ஒரு பயணி என்று இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தன்பாத் நகரத்தில் உள்ள மக்கள் பொழுதுபோக்கிற்காக மேலிருந்து நகரத்தை பார்த்து மகிழும் வகையில் இந்த கிளைடர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தினால், நகரின் வான்வழிப் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:-"தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து நடந்திருக்கலாம். உரிய விசாரணைக்கு பிறகு தான் விபத்திற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples injured for glider flight crashing into house in jarkhant


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->