கன்னியகுமாரி || தகாத உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தை - தாய் செய்த கொடூரச் செயல்.!
two peoples arrested for kill baby in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரையுமன்துறை பகுதியை சேர்ந்த சீனு-பிரபுஷா தம்பதிக்கு நட்சன் ராய், அரிஸ்டோ பியூலன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரபுஷாவுக்கும், காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்த முகமது சதாம் உசேன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய பழக்கம் ஏற்பட்டது.

இதையறிந்த சீனு மனைவி பிரபுஷாவை விட்டு பிரிந்து தனது மூத்தக் குழந்தையுடன் தனியாக சென்று விட்டார். பின்னர் பிரபுஷா, இரண்டாவது குழந்தை மற்றும் முகமது சதாம் உசேனுடன் தூத்துக்குடிக்கு குடியேறினார்.
இதையடுத்து, பிரபுஷா தனது குழந்தைக்கு திடீரென உடல் நிலை சரியில்லை என்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது குழந்தை இறந்தது தெரியவந்தது.
உடனே மருத்துவர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரபுஷா மற்றும் முகமது சதாம் உசேன் உள்ளிட்டோரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், குழந்தை உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் இருவரும் மது கொடுத்து அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் பிரபுஷா மற்றும் முகமது சதாம் உசேன் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.
English Summary
two peoples arrested for kill baby in kanniyakumari