மும்பை : 2.97 கிலோ போதைப்பொருளை வினோத முறையில் கடத்திய இரண்டு நைஜீரியர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜீரியா நாட்டில் லாகோஸ் நகரில் இருந்து அடிஸ் அபபா வழியாக விமானம் ஒன்று வந்தது. 

அதில் அளவிற்கு அதிகமாக போதைப்பொருள் கடத்தி வரப்பட உள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மும்பைக்கு வந்திறங்கிய விமானத்தின் பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

அந்த சோதனையில் இரண்டு நைஜீரிய பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிகாரிகள் அவர்களின் உடைமைகளில் சோதனை செய்தனர். அதில் போதைப்பொருள் எதுவும் கிடைக்கவில்லை. 

இதையடுத்து, அவர்கள் போதைப்பொருளை வயிற்றில் விழுங்கி கடத்தி வந்திருக்கலாம் என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் நீதிமன்ற அனுமதியுடன் இரண்டு பயணிகளுக்கும் மருத்துவ சோதனை மேற்கொண்டனர். 

அந்த மருத்துவ சோதனையில் அவர்கள் இரண்டு பேரும் வயிற்றில் கேப்சூல் வடிவில் போதைப்பொருளை விழுங்கி உள்ளது தெரியவந்தது. அதன் பின்னர் மருத்துவர்கள் உதவியுடன் இரண்டு பேரின் வயிற்றில் இருந்தும் சுமார் 2.97 கிலோ கொகைகன் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனரக பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:- "இந்த போதைப்பொருள் மதிப்பு சுமார் 30 கோடி ஆகும். போதைப்பொருள் கடத்தி வந்த இரண்டு நைஜீரியர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for drugs kidnape in mubai airport


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->