காரில் கடத்தி வந்த வெளிநாட்டு போதைப் பொருட்கள்...! வசமாக சிக்கிய இருவர்...!!!
Two people caught smuggling foreign drugs car
'ஓஜி குஷ்' என்ற விலை உயர்ந்த போதைபொருள், அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கலிபோர்னியா நகரங்களில் தயாரிக்கப்படுகிறது.

இந்த போதைப் பொருட்களை வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்து ஐதராபாத்தில் விற்பனை செய்வதாக நம்பள்ளி காவலருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.
இதனையடுத்து, தெலுங்கானாவின் சிறப்பு படை காவலர்கள் மற்றும் கலால் துறை காவலர்கள், நேற்று விமான நிலையம் அருகே கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கிப்பிடித்தனர். அதில் இருந்த போதைப்பொருட்களான கஞ்சா போதை மாத்திரைகள், வெளிநாட்டு போதைப் பொருட்கள்,மேலும் வெளிநாட்டு மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதன் மொத்த மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதுதொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து, காரில் இருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Two people caught smuggling foreign drugs car