கரும்பு தோட்டத்துக்குள் கதறிய 13 வயது சிறுமி; கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேர்..!
Two people arrested for gang raping a 13 years old girl in a sugarcane plantation
கர்நாடக மாநிலம் பெலகாவி, தாலுகா முர்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 13 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 07-ஆம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த மாதம் (நவம்பர்) 21-ந்தேதி குறித்த சிறுமி வழக்கம் போல் பள்ளி முடிந்து, தனது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மாவு மில் அருகே வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அதேப்பகுதியை சேர்ந்த மணிகாந்த் தின்னிமணி, ஈரண்ணா சங்கம்மன்னவர் ஆகிய 02 பேரும் சிறுமியை பின்தொடர்ந்து வந்துள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் அந்த சிறுமியை குண்டுக்கட்டாக தூக்கி அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்குள் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சிறுமியை மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். முதலில் பயந்த பெற்றோர், பின்னர் தாமதமாக இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில், தலைமறைவாக இருந்த மணிகாந்த், ஈரண்ணா சங்கம்மன்னவர் ஆகியோரை வலைவீசி தேடி வந்தநிலையில் அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர். தற்போது அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Two people arrested for gang raping a 13 years old girl in a sugarcane plantation