உ.பி : நீதிமன்ற வளாகத்தில் 2 கைதிகள் மீது துப்பாக்கிக்குச் சூடு ..!
two accuest injured for gun shoot in UP court campous
உ.பி : நீதிமன்ற வளாகத்தில் 2 கைதிகள் மீது துப்பாக்கிக்குச் சூடு ..!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜமுப்பூர் மாவட்டம் தர்மபூர் சந்தை பகுதியில் கடந்த ஆண்டு படெல் என்ற மல்யுத்த வீரர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் மிதிலீஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த இரண்டு குற்றவாளிகளும் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் வைத்து இந்த இரண்டு குற்றவாளிகள் மீதும் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.


இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்கள் ஓட முயன்ற நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதற்கிடையே போலீசார் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பிடிபட்ட நபரிடம் விசாரணை செய்ததில், அவர் ஷர்வன்குமார் என்பாத்து தெரிய வந்தது. இதையடுத்து போலீசா அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் கொலையாளிகளை துப்பாக்கியால் சுட சம்பவம் அப்பகுதிஜியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two accuest injured for gun shoot in UP court campous