தற்கொலை அதிர்ச்சி வழக்கில் திருப்பம்: வீடியோ வெளியிட்ட பெண் காவலர்கள் பிடியில்...! - Seithipunal
Seithipunal


கேரளாவில் சமூக வலைதள வைரல் வீடியோ ஒன்று, ஒரு குடும்பத்தின் வாழ்வையே சிதறடித்து விட்ட சம்பவமாக மாறி, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயது தீபக், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அந்த வீடியோ வைரலானதன் பின்னணியில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் உலுக்கியுள்ளது.

கடந்த 16-ம் தேதி, அரசுப் பேருந்தில் பயணித்த போது தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் 18 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்தக் காட்சிகளில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலத் தோன்றியது.

இந்த வீடியோ, சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, லட்சக்கணக்கான பின்னர் மில்லியன் கணக்கான, பார்வைகளைப் பெற்றது. நெட்டிசன்களின் கருத்துகள் இரு முனைகளாகப் பிரிந்தன.

ஒரு தரப்பு தீபக்கை கடுமையாக விமர்சித்தால், மற்றொரு தரப்பு “பேருந்து நெரிசலில் அது தற்செயலாக நடந்திருக்கலாம்; அவர் வேண்டுமென்றே செய்யவில்லை” என ஆதரவு குரல் எழுப்பினர்.ஆனால், வைரல் வீடியோவால் ஏற்பட்ட கடும் மன அழுத்தம் தீபக்கை முற்றிலும் நொறுக்கியது.

அவமானம், சமூக அழுத்தம், மன வேதனை ஆகியவற்றின் சுமையால், அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த துயரச் சம்பவம், “வைரல் நீதியால் உயிர்கள் போகலாமா?” என்ற கேள்வியை மீண்டும் சமூகத்தின் முன் நிறுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தீபக்கின் குடும்பத்தினர் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டதும், அவர் தலைமறைவானதாக தகவல்கள் வெளியாகி, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.இந்த நிலையில், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன், முன்ஜாமீன் கோரி அவர் கோழிக்கோடு மாநாட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஒரு குறும் வீடியோ, ஒரு மனித உயிரை காவு வாங்கிய இந்த சம்பவம், சமூக வலைதள பொறுப்பும், குற்றச்சாட்டுகளின் நுட்பமும் குறித்து புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twist suicide shock case women who released video police custody


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->