மும்பை : 6 டன் கஞ்சா கடத்திய ஐந்து பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை.! - Seithipunal
Seithipunal


கடந்த 2018-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மண்டல பிரிவு வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு, சவுக் பகுதியில் இருந்து மஹாராஷ்டிராவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. 

அந்த தகவலின் படி, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் எல்லை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, இளநீர் ஏற்றி வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் வழிமறித்து லாரியில் இருந்த மூன்று பேரிடம் விசாரணை செய்தனர். 

அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியில் அடுக்கி வைக்கபட்டிருந்த இளநீர் மூட்டையை பிரித்து சோதனை போட்டனர். அதில், 6 டன் எடையுள்ள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடத்தல் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். அத்துடன் அவர்கள் கடத்தி வந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.9 கோடியே 81 லட்சம் ஆகும். 

பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் மேலும் இரண்டு பேர் சிக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் ஐந்து பேர் மீதும் போதைதடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையில் ஐந்து பேரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty years death penalty to five peoples for kidnape ganja in mumbai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->