லாரி மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து: பயணிகளின் நிலை என்ன?
Truck collides with express train
மேற்கு வங்கத்தில் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற லாரி எதிர்பாராத விதமாக எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியதில் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
மேற்கு வங்கம், ஃபராக்கா என்ற இடத்தில் உள்ள ரயில்வே கிராசிங் வழியாக வேகமாக சென்று எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேற்று இரவு லாரி மோதியது.

இந்த விபத்தில் ரயிலின் ஒரு பெட்டி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ரயிலில் இருந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் இந்த விபத்தில் 15 பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில் ரயில் தண்டவாளமும் சேதமடைந்ததால் சிறிது நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
English Summary
Truck collides with express train