2 பயிற்சி விமானிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்து.. விமானிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் 2 பயிற்சி விமானிகளுடன் சென்ற விமானம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது.

மத்திய பிரதேச மாநிலம் பாலகட் மாவட்டத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் 2 பயிற்சி விமானிகளுடன் சென்ற விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்கானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த மீட்பு படை குழுவினர் விமானத்தில் இருந்த பயிற்சி விமானிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள லாஞ்சி மற்றும் கிர்னாபூர் பகுதிகளின் மலைப்பகுதியில் எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமல் போன பெண் பயிற்சி விமானியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் உயிரிழந்த உடலை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trainee aircraft accident in madhya pradesh


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?



Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?




Seithipunal