வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ..இந்தியாவில் என்னென்ன பொருட்கள் விலை குறையும்?
Trade agreement signed what goods will see a price decrease in India?
இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.இதனால் இந்தியாவில் என்னென்ன பொருட்கள் விலை குறையும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு சென்றார். அங்கு லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்டாமர் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்பு ரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும் என தெரிவித்தார்.

இங்கிலாந்து உடனான வரி குறைப்பின் எதிரொலியால் இந்தியாவில் என்னென்ன பொருட்கள் விலை குறையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.ரேஞ்ச் ரோவர், ஜாக்குவார் போன்ற கார்களின் விலை குறையும். பிரிட்டனை சேர்ந்த மதுபானங்கள் குறைவான விலைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேப்போல மருந்துகள் இந்திய சந்தைக்குள் வரி இல்லாமல் நுழைவதால் அவற்றின் விலையும் குறையும்.காஸ்மெடிக்ஸ் , சாக்லேட், பிஸ்கட் ஆகியவற்றின் விலை குறையும். மருத்துவ கருவிகளின் விலையும் குறைகிறது என கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பிரிட்டனில் தயாராகும் குளிர்பானங்கள், அழகுசாதன பொருட்கள், சாக்லேட்கள், பிஸ்கட்கள் மற்றும் கார்கள் ஆகியவை இந்தியர்களுக்கு கிடைப்பது எளிதாகும். மேலும் மின்சார வாகனங்கள் மீதான வரி குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Trade agreement signed what goods will see a price decrease in India?