மீண்டும் பஹல்காமில் குவியும் சுற்றுலா பயணிகள்: சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி..! 
                                    
                                    
                                   Tourists visiting Pahalgam again happy about safety
 
                                 
                               
                                
                                      
                                            கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். குறிப்பாக அவர்களின் மதத்தைக் கேட்டு பிறகு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது. அந்த சம்பவத்தை தொடர்ந்து அங்குள்ள சுற்றுலா தளங்கள் பாதுகாப்பு கருத்தில் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில்,ஜம்மு காஷ்மீரின் பஹல்காமிற்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
-awvzq.png)
பஹல்கம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது மட்டும் 'ஆப்பரேஷன் சிந்தூர்' மூலகம் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்தியாவின் ராணுவ நிலைகள் மற்றும் அப்பாவி மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, பாகிஸ்தானின் விமானப்படை மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என கெஞ்சிய நிலையில், அதனை  இந்தியா ஏற்றுக்கொண்டதால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
-np2rt.png)
தாக்குதலுக்கு பிறகு பஹல்காமிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால், சுற்றுலா பயணிகளை நம்பியிருந்த குதிரை ஓட்டிகள், மற்றும் வழிகாட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வரும்காலத்தில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.
தற்போது, அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. இதனால் பஹல்காம் வழியாக இந்த யாத்திரை நடைபெறுவதால் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த பகுதிக்கு வருபவர்கள், அப்பகுதியின் அழகை ரசிப்பதுடன், குதிரை சவாரி செய்து மகிழ்கின்றனர். மீண்டும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Tourists visiting Pahalgam again happy about safety