#BREAKING || புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.!
Today Pudhuchery and Karaikal holiday due to heavy rain
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலின் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்தது இருந்தது.

அந்த வகையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதனையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று (நவம்பர் 3ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
English Summary
Today Pudhuchery and Karaikal holiday due to heavy rain