பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்... டெல்லி பயணம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில வாரமாக குறைந்து வருகிறது. முதல் கொரோனா பரவல் அலையை விட இரண்டாவது கொரோனா அலைபரவல் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. 

கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. 

இந்நிலையில், வரும் ஜூன் 17 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். கொரோனா தடுப்பூசி வழங்கல், நீட் தேர்வு ரத்து உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் சந்திப்பு இதுவென்பதால், தமிழக முதல்வர் என்னென்ன கோரிக்கை வைக்கப்போகிறார்? என்பது தொடர்பான எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MK Stalin meets PMO India


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->