வீடியோ: கர்ப்பிணிப் பெண்ணை உருட்டுக் கட்டையால் கொடூரமாக தாக்கிய திமுக பிரமுகர்.... தொடரும் திமுக குண்டர்களின் அராஜகம்.. அதிமுக கண்டனம்!
AIADMK Condemn to dmk mk stalin govt
அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பிரியாணி கடை முதல் பூக்கடை வரை தொடரும் திமுக குண்டர்களின் அராஜகம்.
திருவள்ளூர் மாவட்டத்தில், தனது கடைக்கு அருகில் பூக்கடை வைத்திருந்த கர்ப்பிணிப் பெண்ணை கடையை அகற்றச் சொல்லி, அகற்றாததால் தனது நண்பர்களுடன் இணைந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணை உருட்டுக் கட்டையால் கொடூரமாக தாக்கிய திமுக பிரமுகர் புகழேந்தி.
விடியா திமுக ஆட்சியில் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலம்.
சிலநாட்களுக்கு முன்னால் திருத்தணியில் கஞ்சா போதையில் வடமாநில இளைஞரை தாக்கிய போதை ஆசாமிகள்.
திருவள்ளூரில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவரை கல்லால் அடித்துக் கொன்ற போதை ஆசாமிகள்.
நேற்று முன்தினம் வேளச்சேரியில் கஞ்சா போதையில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பொழுதே இளைஞர் ஒருவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இரண்டு வாலிபர்கள்.
இன்று கோவையில் கஞ்சா போதையில் நடுவீதியில் சண்டையிட்ட இளைஞர்கள்.
நான்கரை ஆண்டுகளாக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எதைத் தொடர்ந்து எச்சரித்து வந்தாரோ, அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது. இப்படி மக்களுக்கு உயிர் பயத்தைக் காட்டுவதை தன் சாதனையாக கருதுகிறாரா இன்றைய பொம்மை முதலமைச்சர்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
AIADMK Condemn to dmk mk stalin govt