திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க 16, 31-ந் தேதிகளில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


உலக பிரசித்தி பெற்ற ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க16, 31-ந் தேதிகளில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை 16 மற்றும் 31-ந்தேதிகளில் காலை 9 மணிக்கு தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடுகிறது. 

இதனால் பக்தர்கள் கவனத்தில் கொண்டு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirupati Rs 300 darshan tickets will be released to 16th and 31st


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->