ரூ.300 கோடி செலவில் திருச்செந்தூர் முருகன் கோவில் பல்வேறு பணிகள் - அமைச்சர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ரூ.300 கோடி செலவில் பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயப்படுத்துதல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், "தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின் பெரி, மானிய கோரிக்கையின் போது துறை வாரியாக கூறப்பட்டுள்ள அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. இதனை விரைந்து மக்கள் பயன்பாட்டுக்காக கொண்டு வரவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 

கோவிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தங்கும் விடுதிகள் மற்றும் அன்னதானக்கூடம், முடிகாணிக்கை செலுத்தும் இடம், வியாபார கடைகள், தீயணைப்பு வாகனம் நிறுத்தும் இடம், அவசர ஊர்திகள், யானை பராமரிப்பு கொட்டகை, வாகனம் நிறுத்தும் இடம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நீண்ட நேரம் சாமி தரிசனத்திற்கு காத்திருக்காமல், நேர ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

கோவிலில் எங்கு இருந்து பார்த்தாலும் இராஜகோபுரம் தெரியும் அளவு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்னதான்கூடத்தில் ஒரே நேரத்தில் 1000 பேர் அன்னதான பயன் பெரும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருக்கும் அறைகளில் தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீர் வசதிகள் போன்றவையும் ஏற்படுத்தப்படும். அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 

கோவில் பகுதியை சுற்றிலும் பனை பொருட்கள் மற்றும் கடற்சார் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் தொடங்கப்படவுள்ளது. ரூ.300 கோடி செலவில் பணிகள் நடைபெற்று, 2 வருடத்திற்குள் பணிகள் நிறைவு பெற்று பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்" என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Thiruchendur Murugan Temple Rs 300 Crore Fund Improvement Project Minister Sekar Babu Says


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal