திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், உலக பிரசித்தி பெற்ற இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள்.

இதில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சணம், சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும்.

மேலும், மே மாதத்திற்கான சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை சேவை போன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்களும் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathi Elumalaiyan temple may month Arjitha sevai ticket from today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->