திருப்பதி கோவில்.. ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் விற்பனை எப்போது.? தேவஸ்தானம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், உலக பிரசித்தி பெற்ற இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள்.

இதில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சணம், சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் வரும் 24ம் தேதி ஆன்லைனில் வெளியீடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirupathi Elumalaiyan temple July and August 300 rupees ticket from May 24


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->