உத்திரபிரதேசம்! பழங்கால கோவில் சிலைகளை களவாடிய கும்பல்... மன்னிப்பு கடிதத்துடன் சிலைகளை ஒப்படைத்து தப்பியோட்டம்.! - Seithipunal
Seithipunal


உத்திரப் பிரதேசத்தில் பழங்கால கோவில் சிலைகளை களவாடிய கும்பல் மன்னிப்பு கடிதத்துடன் சிலைகளை ஒப்படைத்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.

உத்திரபிரதேசம் தரூகா பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான சுவாமி பாலாஜி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமான விலை மதிப்பற்ற 16 சிலைகளை கடந்த 9ஆம் தேதி திருட்டு கும்பல் களவாடி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கோவில் அர்ச்சகரின் வீடு அருகே 14 சிலைகளை வைத்து விட்டு மன்னிப்பு கடிதம் ஒன்றையும் வைத்துவிட்டு திருட்டு கும்பல் தப்பி சென்று உள்ளது.

அந்த கடிதத்தில் சிலை களவாடிய நாள்முதல் தாங்கள் தூக்கமின்றி தவிப்பதாகவும், அடிக்கடி கெட்ட கனவு வருவதாகவும் திருடர்கள் எழுதி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thieves returned the stolen idols


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->