'அச்சுறுத்தல்களுக்கு இந்தியாவில் இடமில்லை'...! - பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக பிரதமர் மோடி விடுத்த 'பவர்ஃபுல்' எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல், நாட்டையே உலுக்கிய இருண்ட நினைவாக இன்னும் மனங்களில் பதிந்துள்ளது.

பஹல்காமின் அழகிய பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, ஒரு கணத்தில் அமைதியை சிதைத்து இரத்த வெள்ளமாக மாற்றியது.

இந்த கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர் காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “பஹல்காமில் இதே நாளில் உயிரிழந்தவர்களை நான் மனமார நினைவுகூர்கிறேன்.

அவர்கள் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. தங்கள் அன்பினரை இழந்து துயரத்தில் இருக்கும் குடும்பங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். இந்த துயர தருணத்தில் நாடு முழுவதும் ஒன்று சேர்ந்து நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் தலைகுனியாது; அது ஒருபோதும் வெற்றி பெறாது” என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There no place threats India Prime Minister Modi powerful warning against terrorist forces


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->