நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: பணம் யாரிடமிருந்து, எங்கிருந்து வந்தது,பின்னணியில் யார் இருக்கிறார்..? துணை ஜனாதிபதி அடுக்கடுக்கான கேள்வி..! - Seithipunal
Seithipunal


அலகாபாத் உயர்நீதிமன்றம் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளார். அவருக்கு பணம் யாரிடமிருந்து வந்தது, எங்கிருந்து வந்தது, குறித்த பின்னணியில் யார் இருக்கிறார் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக துணை ஜனாதிபதி கூறியதாவது: டில்லியில், மார்ச் மாத மத்தியில் நீதிபதியின் வீட்டில் வேதனையான சம்பவம் நடந்துள்ளது, கறைபடிந்த, கணக்கில் வராத, சட்டவிரோதமான மற்றும் காரணம் சொல்ல முடியாத அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட்டுள்ளதோடு, 06 -07 நாட்களாக அந்த விஷயம் பொது வெளியில் விவாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,  அது வெளியில் தெரியாமல் இருந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு கறைபடிந்த, கணக்கில் வராத மற்றும் காரணம் சொல்ல முடியாத பணம் கைப்பற்றப்படும் போது, அது யாருடையது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது, பணம் வந்த பாதை என்ன? எங்கு இருந்து வந்தது பின்னணியில் பெரிய புள்ளிகள் யாரும் உள்ளனரா? நீதித்துறை அல்லது நீதித்துறைப் பணிகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளதா?என்று கிடுபிடியான் கேள்விகளை கேட்டுள்ளதோடு, இந்த பிரச்னைகள் அனைத்தும் வழக்கறிஞர்களை மட்டும் அல்ல சாமானிய மக்களையும் கோபமடைய வைத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஏன் இது தொடர்பில், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை..? விசாரணை ஏன் நடத்தப்படவில்லை..? என கேள்வி எழுகிறதாகவும், ஒரு ஜனநாயகத்தில் சிலர் மட்டும் விசாரணை மற்றும் ஆய்வுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தால், சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டத்தில் சமத்துவம் கடுமையாக சமரசம் செய்யப்படுகின்றன என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், இரண்டு மாநிலங்களின் நீதித்துறையை உள்ளடக்கிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, நீதித்துறை பணியைச் சார்ந்து, நிர்வாக பணியையும் செய்கிறார். இந்த நிர்வாகப் பணி மிகப்பெரியது என்றும் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கு நீதிபதிகளுக்கான குழு அனுமதி வழங்கியுள்ளதா..? அதற்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா..? அதன் அறிக்கை ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா..? அந்த அறிக்கையை செயல்படுத்த முடியுமா..? என்று கேள்வி கேட்டுள்ளார்.

அத்துடன், ஒரு நீதிபதியை நீக்கும் வழிமுறை இருந்தால், அதனை லோக்சபா அல்லது ராஜ்யசபாவில் தான் தொடங்க முடியும் என அரசியலமைப்பு கூறுகிறது. இது தான் ஒரே வழியா..? அப்படியென்றால், நீதிபதிகள் குழுவானது, எப்ஐஆர்.,க்கு மாற்றாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது நாம் உரிமை கோரியிருந்தால் சட்டத்தின் முன் சமத்துவம் இருக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி மற்றும் ஆளுநர்கள் கூட பதவியில் இருக்கும் வரை வழக்கு தொடர்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இந்த நாட்டில் யாருக்கும் இந்த சலுகை கிடையாது என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Vice President is questioned repeatedly about the money in Judge Yashwant Verma house


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->