வரலாறு காணாத வீழ்ச்சி: அமெரிக்க டாலருக்கு நிகராக சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு..! ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை அந்நாட்டு அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜவுளி, தோல், காலணிகள் மற்றும் இறால் போன்ற பொருட்களின் ஏற்றுமதி வெகுவாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து, பெரும்பாலானவர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் நிலவுகிறது. இதையடுத்து ஏற்றுமதியை அதிகரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது.

இந்த சூழலில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 87.73 ஆக தொடங்கி முடிவடைந்துள்ளது. ஆனால் நேற்று இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பதற்றம், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு வெளியேறியமை உள்ளிட்ட காரணங்களால், ரூபாய் மதிப்பு ஒரேடியாக 61 காசுகள் வீழ்ச்சியடைந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முதல் முறையாக ரூ.88.19ஐ தொட்டது.

50 சதவீத, வரி விதிப்பு, தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி ஆகியவை இந்த சரிவுக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தங்கத்தில் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The value of the Indian rupee has fallen to an unprecedented level


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->