காங்கிரஸ் எம்பி கார்த்தியின் ரூ.54 கோடி சொத்துக்ககளை முடக்கியதை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது..! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துககளை அமலாக்கத்துறை முடக்கியதை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

மன்மோகன் சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்த போது, மொரீஷியஸில் இருந்து, 305 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதி பெற்றது. இதற்கான அனுமதி விதிகளை மீறி வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

அதனை தொடர்ந்து, அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தின் மகன் கார்த்தி உதவியதாகவும், இதற்காக அவரது மறைமுக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் கார்த்தி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை ஆகியுள்ளார்.

கடந்த 2018 -ஆம் ஆண்டு குறித்த வழக்கில், கார்த்திக்கு சொந்தமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள ரூ.54 கோடி மதிப்புளள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

அமலாக்கத்துறையின் குறித்த நடவடிக்கையை எதிர்த்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், கார்த்தி மனு தாக்கல் செய்தார்.  அதனபடி விசாரணை நடத்திய தீர்ப்பாயம், கார்த்தியின் சொத்துகள் அமலாக்கத்துறை முடக்கியதை உறுதி செய்துள்ளதோடு,மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The tribunal has confirmed the freezing of Congress MP Karthis assets worth Rs 54 crores


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->