கனமழைக்கு 241 பேர் பலியான சோகம்!
The tragedy of 241 people dying due to heavy rains
இமாசல பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 241 பேர் உயிரிழந்து உள்ளனர்.பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படியும் மாநில பேரிடர் மேலாண் கழகம் அறிவுறுத்தி உள்ளது.
இமாசல பிரதேசத்தில், நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. பல்வேறு இடங்களிலும் இந்த மழையானது கொட்டி தீர்த்தது. தொடர்ந்து, பல நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக . நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேகவெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இதனால் இமாசல பிரதேசத்தில் மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு பலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் நடந்தது.மேலும் அங்கு கனமழை கொட்டி வருவதால் தொடர் பாதிப்பு ஏற்பட்டு மீட்ப்பு பணிகளும் நடந்து வருகிறது.
கடந்த பல நாட்களாக பெய்து வரும் மழையில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில், மாநில பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 241 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் மழை தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 126 ஆகும். சாலை விபத்துகளில் சிக்கி 115 பேர் உயிரிழந்ததும் இதில் அடங்கும்.கடந்த 24 மணிநேரத்தில் கனமழை மற்றும் அது தொடர்பான சம்பவங்களில் மாநிலம் முழுவதும் 323 சாலைகள், 70 மின்மாற்றிகள் மற்றும் 130 நீர் விநியோக திட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், இயற்கை பேரிடர்கள் மற்றும் உட்கட்டமைப்பு பாதிப்பு ஆகிய இரு வகை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகள் நடந்து வரும் சூழலிலும், பல பகுதிகளை சென்றடைவது இயலாத ஒன்றாக உள்ளது. எனினும், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படியும் மாநில பேரிடர் மேலாண் கழகம் அறிவுறுத்தி உள்ளது.
English Summary
The tragedy of 241 people dying due to heavy rains