தேர்வு எழுத அனுமதிக்காததால் மாணவி எடுத்த விபரீத முடிவு!
The student took a drastic decision due to not being allowed to take the exam
தேர்வு எழுத அனுமதிக்காததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் மியாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் விஜய் நாயக். இவரது மனைவி சின்மயி இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவள் பெயர் ஹன்சிகா மகள் தன்ஷிகா. அங்குள்ள ஒரு தரியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தேர்வு எழுத சென்ற மாணவியை பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதிக்காமல் வீட்டுக்கு திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது .இதனால் கடும் மனம் வருத்தத்தில் இருந்த அன்சிகா வீடு திரும்பியதும் தான் வசிக்கும் ஐந்தாவது மாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் .
அப்போது அவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடி துடிக்க பரிதாபமாக இருந்தார் .இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .மாணவியின் இறப்புக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? அல்லது காதல் விவகாரம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் முன்னதாக அன்சிகாவின் பள்ளியில் படித்த சக மாணவன் கடந்த வாரம் பள்ளியில் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹன்சிகாவும் ஷேக் ரிஷ்வானும் சமூக வலைதளத்தில் நட்பாக பழகி வந்துள்ளனர். இதை அறிந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் பள்ளி முதல்வரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தயாரிடம் பள்ளி முதல்வர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. போலீசார் இந்த தற்கொலை சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.
English Summary
The student took a drastic decision due to not being allowed to take the exam