நாட்டை காக்கும் பாதுகாவலன் போதை பொருள் கும்பல் தலைவனான கதை..வெளியான அதிர்ச்சி தகவல்!
The story of the protector of the nation who becomes a drug gang leader shocking news revealed
தேச பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஒருவர் , போதை பொருள் கும்பல் தலைவனாக மாறிய அதிர்ச்சியான விசயம் தெரிய வந்துள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது , பயங்கரவாத ஒழிப்புக்கான நடவடிக்கையில் இருந்து வந்தவர் தேசிய பாதுகாப்பு படையை வீரர் பஜ்ரங் சிங்.
இந்நிலையில் தேச பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அவர், போதை பொருள் கும்பல் தலைவனாக மாறிய அதிர்ச்சியான விசயம் தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.சமீபத்தில் நடந்த கஞ்சா ஒழிப்பு அதிரடி நடவடிக்கையின்போது, அவர் செய்யப்பட்டார்.
இதனை ஐ.ஜி. விகாஸ் குமார் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது:தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் இருந்து ராஜஸ்தானுக்கு கஞ்சா கடத்தியதில் அவருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . 10-ம் வகுப்பு வரையே படித்திருந்தஅவருக்கு பி.எஸ்.எப். படையில் சேர வாய்ப்பு கிடைத்தது.
அப்போது, பல்வேறு மாநிலங்களிலும் பணிபுரிந்ததுடன், மாவோயிஸ்டுகள் மற்றும் எல்லையில் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக நாட்டை பாதுகாக்கும் பணியில் 7 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், 2021-ம் ஆண்டு அரசியலில் ஈடுபடுவதற்காக சொந்த ஊருக்கு வந்து அரசியல் கட்சியில் ஒன்றிலும் சேர்ந்துள்ளார்.இதன்பின்னர், போதை பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. ஒரு வருடத்தில், கஞ்சா கும்பல் தலைவனானார்.
இதன்பின்பு சிறிய அளவிலான போதை பொருள் கடத்தலில் எல்லாம் அவர் ஈடுபட ஒப்பு கொள்வதில்லை. குவிண்டால் கணக்கில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டார். இதன்பின்னர், சமையல்காரர் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டார் என்று ஐ.ஜி. விகாஸ் குமார் கூறினார்.
English Summary
The story of the protector of the nation who becomes a drug gang leader shocking news revealed