"தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய நபர், போலீசாரால் கைது ! சிங்கப்பூர் பணி உரிமை ரத்து! - Seithipunal
Seithipunal


காரைக்குடி அருகே வைத்தியலிங்க பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பாக இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புக்கு நிதி உதவி வழங்கியதாக சொல்லப்படுகிறது.

இதை தொடர்ந்து சிங்கப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து சாகுல் அமீதின் பணிக்கான உரிமையை ரத்து செய்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்.

மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சென்னையில் மேலும் அவரிடம் விசாரணை நடத்தி ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு கொண்டதால் வைத்திலிங்கபுரத்தில் உள்ள சாகுல் ஹமீது வீடு மற்றும் அவரது மாமனார் வீடு ஆகிய இடங்களில் மதுரை அமலாக்கத்துறை மற்றும் வங்கி நிர்வாகிகள் கொண்ட பத்து பேர் குழு ஆய்வு மேற்கொண்டு விசாரித்தனர். இந்த விசாரணை அவர்களது குடும்ப நபர்களிடையே தொடர்ந்து 7 மணி நேரம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

அவருடைய வீட்டின் ஆவணங்கள் மொபைல் போன் முதலியவற்றையெல்லாம் அமலாக்குத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சாகுல் அமீது விசாரணைக்காக மதுரை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.  முகமது அலி ஜின்னா என்பவரை நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The person who donated for restricted Organization by the Government has arrested by police


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->