சங்கராச்சாரியாரை விமர்சித்த சாமியாரான நடிகை; மடாதிபதி பதவியை பறித்துள்ள கின்னார் அகாரா அமைப்பு..! - Seithipunal
Seithipunal


பிரபல முன்னாள் பாலிவுட் நடிகையான மம்தா குல்கர்னி, ஆன்மீகத்தில் ஈடுபட்டு யமாய் மம்தா நந்த் கிரி என பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். இவர் கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது கின்னார் அகாராவின் மகாமண்டலேஸ்வராக (மடாதிபதி) நியமிக்கப்பட்டார். அந்த அமைப்புக்குள் ஏற்பட்ட பூசல் மற்றும் நிதி தொடர்பான புகார்கள் காரணமாக அவர், கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பதவி விலகினார். பின்னர் சமாதானம் செய்யப்பட்டு மீண்டும் அமைப்பில் சேர்க்கப்பட்டார்.

இந்த சூழலில், கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். மீண்டும் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக கூறி அமைப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். அதாவது, நடப்பாண்டில் மாக் மேளா சங்கமம் படித்துறையில் குளிப்பது தொடர்பான விவகாரத்தில், சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு, பல்லக்கில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதுகுறித்து கடந்த 25-ஆம் தேதி கருத்து தெரிவித்த மம்தா குல்கர்னி, சங்கராச்சாரியாரை நியமித்தது யார்.? கூட்ட நெரிசலில் பல்லக்கில் செல்ல அடம் பிடிப்பது ஏன்..? அவரது பிடிவாதத்தால் சீடர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், இவரது பேச்சு அகாரா விதிகளை மீறியதாக இருந்ததால், நேற்று மம்தா குல்கர்னியை இந்த அமைப்பிலிருந்து நீக்குவதாக கின்னார் அகாரா தலைவர் லக்ஷ்மி நாராயண் திரிபாதி உறுதிப்படுத்தியுள்ளார். இவருக்கும் அமைப்புக்கும் இனிவரும் காலங்களில் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Kinnar Akhara organization has stripped Mamta Kulkarni of her monastic title for criticizing Shankaracharya


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->