"அஜித் பவாரின் மரணம் துரதிர்ஷ்டவசமான விபத்து மட்டுமே. இதை அரசியலாக்க வேண்டாம்''; சரத் பவார் வேண்டுகோள்..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து தனி விமானத்தில் மூலம், பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். விமானம் பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அஜித் பவாருடன் சென்ற மொத்தம் 05 பேர் உயிரிழந்துள்ளனர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ள நிலையில், இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 

அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த துக்க சூழலிலும் சில அரசியல் தலைவர்கள் அவரது மரணத்தில் சூழ்ச்சி இருப்பதாக கூறி அரசியல் செய்து வருகின்றனர். இந்நிலையில், அஜித் பவார் மரண விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என சரத் பவார் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர்தெரிவிக்கையில், "அஜித் பவாரின் விமான விபத்து முற்றிலும் எதிர்பாராத ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து மட்டுமே. இதை அரசியலாக்க வேண்டாம். இது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு. இதை ஈடுசெய்வது கடினம். சிலர் இதை அரசியலாக்க முயற்சிப்பது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sharad Pawar appealed not to politicize Ajit Pawars death


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->